படு கவர்ச்சியில் சமந்தா! வீடியோவால் அதிர்ச்சியான ரசிகர்கள்
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயிற்சியாளரின் உதவியுடன் பளுதூக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை
விண்ணை தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமுகமான சமந்தா தன் விடா முயற்சியில் இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார்.
திருமணத்துக்கு பிறகும் அரைகுறை உடையில் நடித்து பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், மண வாழ்க்கையில் முறிவு ஏற்பட்டு கணவர் நாக சைதன்யாவை சமந்தா விவாகரத்து செய்து விட்டார். சமீபத்தில் திரைக்கு வந்த புஷ்பா படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு ஆடிய குத்தாட்டத்துக்கும் கண்டனங்கள் எழுந்தன. பாடல் வரிகள் ஆண்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளது என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
முதன்மை கதாபாத்திரங்களிலும் நடித்துவரும் சமந்தா தற்போது கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.
சமந்தா சமூகத்தளங்களிலும் தன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகின்றார். சமீபத்தில் படுகவர்ச்சியான உடையில் போட்டோஷுட் எடுத்துள்ள நிலையில், இக்காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயிற்சியாளரின் உதவியுடன் பளுதூக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் பயிற்சியாளரின் குறிப்புகளை கவனமாக கேட்டு பளுதூக்கும் காட்சி பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைக்கிறது.
உடல் உறுதியை காக்க மன உறுதியுடன் சமந்தா செய்துள்ள இந்த ஒர்க்கவுட் வீடியோவுக்கு நடிகை காஜல்அகர்வால் உள்பட 10 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story