இங்கிலாந்தில் நடிகை ராதிகா வாங்கிய விருது!
சின்னத்திரை, வெள்ளித்திரை என தனது நடிப்பினால் கொடி கட்டிப பறப்பவர் நடிகை ராதிகா.
லண்டன்,
சின்னத்திரை, வெள்ளித்திரை என தனது நடிப்பினால் கொடி கட்டிப பறப்பவர் நடிகை ராதிகா. இவர் ரடான் மீடியாவில் நிர்வாக இயக்குனராகவும் உள்ளார்.
தமிழ் ஸ்டடீஸ் யூகே எனும் அமைப்பின் சார்பாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மரியா மில்லர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உலகெங்கும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள் கவுரவிக்கப்பட்டனர்.
இந்த உயரிய விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ராதிகாவும் ஒருவர். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்ற கையோடு, ராதிகா அங்கு உரையாற்றியும் இருக்கிறார்.
நடிகை ராதிகா பேசும் போது கூறியதாவது:-
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் நிரம்பிய தருணம்.
இவ்விருதிற்கு என்னை தேர்ந்தெடுத்த தேர்வுக்குழுவினருக்கும், இத்தனை ஆண்டு காலம் எனக்கு ஆதரவளித்த திரை மற்றும் தொலைக்காட்சித் துறையினருக்கும், குடும்பத்தினருக்கும் மிக்க நன்றி,” என்று கூறினார்.
நிகழ்ச்சியில் நடிகை ராதிகா கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
UK Tamil Studies Forum honoured women achievers in the British Parliament, hosted by RT Hon Maria Miller MP, proud to be a recipient🙏🙏Thank you for the honour pic.twitter.com/QRxsGlCTkr
— Radikaa Sarathkumar (@realradikaa) April 19, 2022
Related Tags :
Next Story