பிரம்மாண்ட வெற்றி: 1100 கோடியை கடந்த ஆர்.ஆர்.ஆர் வசூல்


பிரம்மாண்ட வெற்றி: 1100 கோடியை கடந்த ஆர்.ஆர்.ஆர்  வசூல்
x
தினத்தந்தி 23 April 2022 6:41 AM IST (Updated: 23 April 2022 6:41 AM IST)
t-max-icont-min-icon

ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் 1100 கோடி வசூலை கடந்துள்ளது.

பெங்களூரு,

ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர்.'  

பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் கடந்தமார்ச் 25 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி உலகம் முழுவதும் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது. 

இந்த நிலையில், இந்த படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 1100 கோடி வசூலை குவித்து சாதனை படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


Next Story