முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கொண்டாடப்படுவது வேதனையாக உள்ளது - பத்மா லட்சுமி


Image Courtesy: AFP
x
Image Courtesy: AFP
தினத்தந்தி 28 April 2022 2:08 PM IST (Updated: 28 April 2022 2:08 PM IST)
t-max-icont-min-icon

"முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கொண்டாடப்படுவதைப் பார்க்கும் போது வேதனையாக உள்ளது என பிரபல மாடல் அழகி பத்மா லட்சுமி கூறி உள்ளார்.

மும்பை: 

இந்திய அமெரிக்க முன்னாள் மாடல் அழகியும்  எழுத்தாளருமான பத்மா லட்சுமி( 51 )  தனது சமூக வலைதளத்தில் கூறி இருப்பதாவது:- 

அனைத்து மதத்தினரும் "இந்த பண்டைய, பரந்த நிலத்தில்" நிம்மதியாக வாழ முடியும் இந்தியாவிலோ அல்லது வேறு எங்கும் இந்து மதத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை .

பரவலான முஸ்லீம் எதிர்ப்பு  பேச்சுகள் இருப்பதாகவும், இந்துக்கள் இந்த பயத்தை தூண்டும் மற்றும் பிரச்சாரத்திற்கு அடிபணிய மாட்டார்கள் என்று நம்புகிறேன் என கூறினார். 

டெல்லியின் ஜஹாங்கிர்புரி ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இரு சமூகத்தினரிடையே மோதல் மற்றும் இந்த மாத தொடக்கத்தில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது மத்தியப் பிரதேசத்தின் கர்கோன் நகரில் நடைபெற்ற வன்முறை  குறித்து  தி கார்டியன் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் போன்ற சர்வதேச பத்திரிகைகளின் செய்திக் கட்டுரைகளை சுட்டிகாட்டி உள்ளார்.

மேலும் இந்தியாவில் கொண்டாடப்படும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகளைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. பரவலான முஸ்லீம் எதிர்ப்பு வாசகங்கள் அச்சத்தை தூண்டுகிறது. இது மக்களை விஷமாக்குகிறது. இந்த பிரச்சாரம் ஆபத்தானது மற்றும் மோசமானது, ஏனென்றால் நீங்கள் ஒருவரை விட குறைவாகக் கருதினால் அவர்களின் அடக்குமுறையில் பங்கேற்பது மிகவும் எளிதானது

சக இந்துக்களே, இந்த பயத்தை தூண்டிவிடாதீர்கள். இந்து மதத்திற்கு இந்தியாவிலோ அல்லது வேறு எங்கும் அச்சுறுத்தல் இல்லை. உண்மையான ஆன்மீகத்தில் எந்த வித வெறுப்பையும் விதைக்க இடமில்லை. அனைத்து மதத்தினரும் வாழ வேண்டும். இந்த புராதன, பரந்த நிலத்தில் அமைதியான முறையில் ஒன்றாக," என்று கூறி உள்ளார்.


Next Story