ஆபாச படத்தில் நடித்தபோது போலீசாரிடம் சிக்கிய பிரபல நடிகை...?


ஆபாச படத்தில் நடித்தபோது போலீசாரிடம் சிக்கிய பிரபல நடிகை...?
x
தினத்தந்தி 29 April 2022 12:20 PM IST (Updated: 29 April 2022 12:20 PM IST)
t-max-icont-min-icon

பிரபல இந்தி நடிகை உர்வி ஜாவித் ஆபாச படத்தில் நடித்தபோது போலீசாரிடம் சிக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.




புதுடெல்லி,



இந்தி திரையுலகில் வளர்ந்து வரும் பிரபல நடிகை உர்வி ஜாவித்.  அடிக்கடி கவர்ச்சியான படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி கொள்பவர்.  இந்தியில் வெளியான பிக்பாஸ் ஓடிடியிலும் அவர் பங்கேற்றுள்ளார்.

இந்த நிலையில், அவர் ஆபாச படம் ஒன்றின் படப்பிடிப்பில் இருக்கும்போது, போலீசார் அவரை கையும் களவும் ஆக கைது செய்ய வரும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகின.

இந்த வீடியோவை ரோகித் குப்தா என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார்.  அந்த பதிவில், நடிகை உர்வி இயக்குனர் ஒருவரின் அலுவலகத்தில் அவரை சந்தித்து படம் ஒன்றில் நடிப்பது பற்றி பேசுகிறார்.  

அவரிடம் இயக்குனர், இது ஒரு ரகசிய தயாரிப்பு.  படத்தில் வில்லனாக ரன்பீர் கபூர் நடிக்கிறார் என கூறுகிறார்.  இதனை கேட்டு உர்விக்கு ஆர்வம் அதிகரிக்கிறது.

படத்தின் நாயகன் வேடத்திற்கு வெளிநாட்டு நடிகரை தேர்வு செய்திருக்கிறோம்.  பாட்ஷா படத்திற்கு இசையமைக்கிறார் என கூறியுள்ளார்.  மற்றொரு இயக்குனர் என கூறப்படும் ரோகித் படத்தின் நாயகனுடன் அந்த அலுவலகத்திற்கு வருகிறார்.

அவர்களிடம் அந்த நடிகர் வெளிநாட்டுக்காரரா? என உர்வி கேட்கிறார்.  அவர் உகாண்டாவை சேர்ந்தவர் என கூறுகிறார்கள்.

இதனை தொடர்ந்து அந்த நடிகருடன் நடிப்பதற்காக உர்வியை இயக்குனர் அழைத்து செல்கிறார்.  சில அருவருக்கத்தக்க வசனங்களை கொடுத்து பேச சொல்கிறார்.

ஆனால், இந்த நிலையில் என்ட்ரி கொடுத்த போலீசார் ஒருவர் அந்த 3 பேரையும் ஆபாச படம் எடுப்பதற்காக அடித்து, விளாசுகிறார்.  இதனால் பயந்து போன அவர்கள் 3 பேரும் உர்வியை கைகாட்டுகின்றனர்.

இதனால், ஆத்திரமடைந்த உர்வி தனது மேலாளருக்கு போன் போட்டு, இதுபோன்ற படத்தில் நடிக்க வைத்து விட்டாயே என்று சத்தம் போடுகிறார்.  அதற்கு மேலாளர் தொலைபேசியில், இது ஒரு வேடிக்கைக்காக விளையாட்டாக எடுக்கப்பட்டது.  உண்மையல்ல என்று கூறுவதுடன் வீடியோ முடிகிறது.


Next Story