காதலிக்க கட்டாயப் படுத்தும் டைரக்டர் பிரபல நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு


Image Courtesy: indulgexpress.com
x
Image Courtesy: indulgexpress.com
தினத்தந்தி 6 May 2022 4:30 PM IST (Updated: 6 May 2022 4:30 PM IST)
t-max-icont-min-icon

சனல்குமார் சசிதரன் இயக்கிய ‘கயட்டம்’ படத்தின் படபிடிப்பின் போதே அவர் என்னை காதலிப்பதாக கூறினார்.

திருவனந்தபுரம்

மலையாள பட உலகின் முன்னணி நடிகை மஞ்சு வாரியர். தமிழில் தனுஷ் நடித்த அசுரன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் திலீப்பை திருமணம் செய்த நடிகை மஞ்சுவாரியர், பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். அதன்பின்பு தனியாக வசித்து வரும் மஞ்சுவாரியரை காணவில்லை என்றும், அவர் சிலரது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் மலையாள இயக்குனர் சனல்குமார் சசிதரன் என்பவர் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டார்.

இயக்குனர் சனல்குமார் சசிதரனின் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து மஞ்சு வாரியர் எங்கே? என்ற கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில் நடிகை மஞ்சுவாரியர் கொச்சி போலீஸ் கமிஷனரை சந்தித்து ஒரு புகார் கொடுத்தார். அதில் டைரக்டர் சனல்குமார் சசிதரன், தன்மீது அவதூறு பரப்பி வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். அதன்பேரில் நேற்று எர்ணாகுளம் போலீசார், இயக்குனர் சனல்குமார் சசிதரனை கைது செய்தனர்.

சனல்குமார் சசிதரன் மீது நடிகை மஞ்சுவாரியர் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அந்த புகாரில் சனல்குமார் சசிதரன் இயக்கிய ‘கயட்டம்’ படத்தின் படபிடிப்பின் போதே அவர் என்னை காதலிப்பதாக கூறினார். அதனை நான் ஏற்க மறுத்தேன். அதன்பிறகும் அவர் என்னை காதலிப்பதாக கூறி தொலைப்பேசியில் பேசினார். அதனையும் நான் கண்டித்தேன். அதன்பின்பும் அவர் விடாமல் தன்னை காதலிக்க வலியுறுத்தி சமூக வலைதளங்களில் மூலம் கருத்து பதிவிட்டு வந்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே நான் அவரது பதிவுகளை கண்டு கொள்ளாமல் இருந்தேன். அதன்பிறகும் அவர் என்னை தொந்தரவு செய்வதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்.

Next Story