சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டான்' படத்தின் டிரைலர் வெளியானது ..!
டான் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது .
சென்னை,
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் .
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டான் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது .
Here is our #DonTrailer - https://t.co/Uep484eRfb
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) May 6, 2022
Hope you all like it😊👍#DONfromMay13 in theatres👍@Dir_Cibi@anirudhofficial@iam_SJSuryah@Udhaystalin@priyankaamohan@thondankani@sooriofficial@KalaiArasu_@SKProdOffl@LycaProductions@RedGiantMovies_@SonyMusicSouth
Related Tags :
Next Story