யாரென்று தெரிகிறதா? நடிகர் ஷாருக் கானின் தோற்றம் கொண்டவரின் பரவசமூட்டும் அனுபவங்கள்
நடிகர் ஷாருக் கானை போன்ற தோற்றம் கொண்டவர் தனக்கு ஏற்பட்ட பரவசமூட்டும் அனுபவங்களை விவரிக்கிறார்.
புதுடெல்லி,
இந்தி திரையுலகின் கிங் கான் என அழைக்கப்படும் நடிகர் ஷாருக் கானை போன்றே தோற்றம் கொண்டவர் இப்ராகிம் கத்ரி. அவரது முக வடிவமைப்பும் கிட்டத்தட்ட ஷாருக் கானை ஒத்திருக்கிறது. எந்தளவுக்கு போகிற இடமெல்லாம் இவருக்கு சிறப்பு கிடைக்கிறதோ இல்லையோ அந்த அளவுக்கு இப்ராகிம் திக்குமுக்காடியும் போகிறார்.
வளர்ந்து பெரிய ஆளாக ஆனதும் இவரது நண்பர்கள் இப்ராகிமை, ஷாருக் கான் என்றே அழைக்க தொடங்கினர். இந்தி சூப்பர் ஸ்டாரை போன்ற உருவம் கொண்ட ஒருவரை பெற்றெடுத்ததற்காக இவரது பெற்றோர் பெருமை அடைந்துள்ளனர். நீ ஷாருக் கானை போன்றே இருக்கிறாய் என அவரிடம் கூறியுள்ளனர்.
தனது வாழ்வில் நடந்த சுவையான தருணங்களை அவர் விவரிக்கிறார். இப்ராகிம் கூறும்போது, ஒரு நாள் நானும் எனது நண்பர்களும், ரேயீஸ் படம் பார்க்க தியேட்டருக்கு சென்றோம்.
அந்த படத்தின் தொடக்க காட்சிக்காக நடிகர் ஷாருக் கானே வந்து விட்டார் என நினைத்து என்னுடன் செல்பி எடுக்க கும்பல் கூடி விட்டது என கூறுகிறார்.
இப்ராகிமுக்கு ஏற்பட்ட மற்றொரு சம்பவம் பற்றி கூறும்போது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடிய போட்டி ஒன்றை காண்பதற்காக ஸ்டேடியத்திற்கு சென்றேன். போட்டியை காண வந்தவர்கள் தங்களுடைய கேமிராவை எடுத்து கொண்டு என்னை சுற்றி வந்தனர்.
சிலர் கைதட்டினர். ஷாருக் கானின் பிரபல படங்களில் வரும் வசனங்களை என்னை நோக்கி கூறினர். ஷாருக் கான் மீது அன்பு கொண்ட எத்தனை ரசிகர்களை அவர் வைத்திருக்கிறார் என முதன்முறையாக நான் பார்த்தேன்.
அது சிறப்பு வாய்ந்த தருணம். ஆனால், தினசரி வாழ்வில் அவர் எவ்வளவு சங்கடங்களையும் சந்திக்கிறார் என உடனே எனக்கு தெரிந்தது. பலர் என்னை சூழ்ந்து நெருக்கி கொண்டனர்.
கெட்டியாக ஒருவர் பிடித்ததில் எனது டி-சர்ட் கிழிந்து விட்டது. நிலைமை மோசமடைந்தது என தெரிந்ததும் ஸ்டேடியத்தில் இருந்து பாதுகாப்புடன் வெளியேற போலீசாரை அழைக்க வேண்டியிருந்தது.
என்னை காப்பாற்றிய பின்பு போலீசார் என்னிடம், ஷாருக் கான் சார். ஒரே ஒரு செல்பி? என கேட்டனர்.
ஒவ்வொரு நாளும் ஆர்வமுடன் என்னை சந்திக்க மக்கள் விரும்பினர். இதனை பார்த்த எனக்கு, அவரை போலவே மாற வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. அதற்கான தீவிர முயற்சி மேற்கொண்டேன். அவருடைய அனைத்து படங்களையும் பார்க்க தொடங்கினேன். அவருடனை நடை, உடை பாவனைகளை பின்பற்ற தொடங்கினேன் என இப்ராகிம் கூறுகிறார்.
என்னை நிகழ்ச்சிகள் மற்றும் திருமணங்களுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்ததுண்டு. கூட்டத்தினரோரு சேர்ந்து சைய்யா, சைய்யா பாடலுக்கு மகிழ்ச்சியுடன் நடனம் ஆடியுள்ளேன் என்றும் கூறுகிறார்.
ஆனால், இவ்வளவு நடந்தும் நடிகர் ஷாருக் கானை இப்ராகிம் நேரில் பார்த்ததில்லை. நடிகர் ஷாருக் கானை நேரில் பார்க்கும் கனவு நனவாகும் ஒரு நாள் வரும். அப்போது நான் வாயடைத்து போவேன் என்று இப்ராகிம் கூறுகிறார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவை லட்சக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் விமர்சனங்களையும் வெளியிட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story