பிரான்ஸில் 75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா இன்று முதல் தொடக்கம்
பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா மிகவும் பிரபலம்
கேன்ஸ்,
பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் நடக்கும் சர்வதேச திரைப்பட விழா மிகவும் பிரபலம். இந்த ஆண்டு பிரான்ஸில் 75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா இன்று முதல் தொடங்குகிறது
ஒவ்வொரு வருடமும், இந்த திரைப்பட விழாவில் கலந்து கொள்ளவும், தங்களின் படம் அதில் திரையிடப்படுவதும் சர்வதேச திரைக் கலைஞர்களின் கனவாக இருந்து வருகிறது. உலகம் முழுவதும் உள்ள திரைக் கலைஞர்கள் சங்கமிக்கும் கேன்ஸ் திரைப்பட விழா வரும் மே 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க உள்ளனர்.
மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் மாதவன், நடிகைகள் நயன்தாரா, பூஜா ஹெக்டே, தமன்னா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர் . இந்த விழாவில் நடிகர் மாதவன் நடிப்பில் உருவான ராக்கெட்ரி உள்ளிட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
Related Tags :
Next Story