கிரிக்கெட்

அதிரடியாக ஆடுகளத்தில் நுழைந்து டோனியின் காலில் விழுந்த ரசிகர் நெகிழ வைக்கும் வீடியோ + "||" + When MS Dhoni Comes on Ground people chants Dhoni... Dhoni...

அதிரடியாக ஆடுகளத்தில் நுழைந்து டோனியின் காலில் விழுந்த ரசிகர் நெகிழ வைக்கும் வீடியோ

அதிரடியாக ஆடுகளத்தில் நுழைந்து டோனியின் காலில் விழுந்த ரசிகர் நெகிழ வைக்கும் வீடியோ
மும்பையில் இடம்பெற்ற இந்தியா ஏ அணி, இங்கிலாந்து அணிக்கு இடையேயான முதல் பயிற்சி ஆட்டத்தின் போது ரசிகர் ஒருவர் அதிரடியாக களத்தில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மும்பையில் இடம்பெற்ற இந்தியா ஏ அணி, இங்கிலாந்து அணிக்கு இடையேயான முதல் பயிற்சி ஆட்டத்தின் போது ரசிகர் ஒருவர் அதிரடியாக களத்தில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்திய ஏ அணி, இங்கிலாந்து அணிக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. இது டோனி கேப்டனாக இருக்கும்  கடைசி போட்டி ஆகும்

குறித்த ஆட்டத்தை பார்க்க இலவசம் என்பதால், டோனி கேப்டனாக விளையாடும் போட்டியை காண ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர்.

இதன்போது இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.. அப்போது 41வது ஓவரில் சதம் அடித்தார். ராயுடு ஓய்வு பெற பின்னர் டோனி களமிறங்கினார். அப்போது, மைதானமே டோனி, டோனி என கோஷம் எழுப்பியது.

டோனி களத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது தீவிர ரசிகர் ஒருவர் அதிரடியாக ஆடுகளத்தில் நுழைந்து டோனியின் காலில் விழுந்தார்.

ஆடுகளத்தில் ரசிகரை கண்ட டோனி அவருக்கு அன்புடன் கைகொடுக்க முன்வந்தார். இதையடுத்து, மைதான ஊழியர்கள் ரசிகரை வெளியேற்றினர். இச்சம்வம் வீடியோவாக வெளியாகி நெகிழ வைத்துள்ளது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய தலைவர் டோனி 68 ரன்கள் குவித்தார். ஆட்டத்தின் கடைசிய ஓவரை சந்தித்த டோனி வான வேடிக்கை காட்டி 23 ரன்கள் எடுத்து தெறிக்க விட்டார். இது ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்தது.