பயிற்சியின் போது அர்ஜுன் டெண்டுல்கர் வீசிய யார்க்கரால் இங்கிலாந்து பேட்ஸ்மேன் காயம்


பயிற்சியின் போது அர்ஜுன் டெண்டுல்கர் வீசிய யார்க்கரால்  இங்கிலாந்து பேட்ஸ்மேன் காயம்
x
தினத்தந்தி 6 July 2017 4:28 PM GMT (Updated: 2017-07-06T21:57:56+05:30)

பயிற்சியின் போது அர்ஜுன் டெண்டுல்கர் வீசிய யார்க்கர் பந்தால் இங்கிலாந்து பேட்ஸ்மேன் காயம் அடைந்து வெளியேறினார்.

லண்டன்,

இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்க அணிகள் இடையேயான  முதல் டெஸ்ட் போட்டி இன்று துவங்கியுள்ளது. முன்னதாக இந்த டெஸ்ட் போட்டியை முன்னிட்டு  இங்கிலாந்து அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். லார்ட்ஸ் மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் பந்து வீசினார். 

இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனான பெர்ஸ்டவ்விற்கு இடது கை மிதவேகப்பந்து வீச்சாளரான அர்ஜூன் தெண்டுல்கர் யார்க்கர் பந்து ஒன்றை வீசினார். இந்த பந்து நேராக பெர்ஸ்டவ் கால் விரல்களை தாக்கியது. இதில், வலியால் துடித்த பெர்ஸ்டவ் பயிற்சியில் இருந்து உடனடியாக விலகினார். இருப்பினும், பெர்ஸ்டவ்விற்கு பயப்படும் அளவிற்கு எந்தகாயமும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியில், பெர்ஸ்டவ் அணியில் இடம் பெற்றார்.


Next Story