திரும்பி வந்துட்டோம்னு சொல்லு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடை நீங்கியது


திரும்பி வந்துட்டோம்னு சொல்லு  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடை நீங்கியது
x
தினத்தந்தி 14 July 2017 4:56 AM GMT (Updated: 2017-07-14T11:54:29+05:30)

திரும்பி வந்துட்டோம்னு சொல்லு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடை இன்றுடன் நீங்கியது

திரும்பி வந்துட்டோம்னு சொல்லு  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடை நீங்கியது

டோனி, ரெய்னா, பிராவோ, மெக்குல்லம், அஸ்வின் மற்றும் ஜடேஜா என பல நடசத்திர வீரர்களை  கொண்டிருந்தது சென்னை அணி.

இரண்டு முறை ஐ.பி.எல் சாம்பியன், இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் சாம்பியன், நான்கு முறை ஐ.பி.எல் ரன்னர்ஸ்-அப், இரண்டு முறை அரையிறுதிப் போட்டிக்கு தகுதி என்று அசத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி பங்கேற்ற அனைத்து ஐ.பி.எல் போட்டிகளிலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரே அணி எது என்று கேட்டால் அதுவும் சென்னை அணி தான்.


அப்படிப்பட்ட அணி தான் கடந்த 2015-ஆம் ஆண்டு எழுந்த சூதாட்ட புகார் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதற்கான தடை இன்று அதாவது வெள்ளிக்கிழமை முடிந்துள்ளது.

இதைத் தொடர்ந்து 2018-ஆம் ஆண்டு சென்னை அணி மீண்டும் ஐபிஎல்லில் களமிறங்கவுள்ளது. அதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது டுவிட்டர் பக்கத்தில் வந்துட்டோம்னு சொல்லு, திரும்பி வந்துட்டோம்னு சொல்லு விசில் போடு என பதிவேற்றம் செய்துள்ளது.

Next Story