வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சென்னையில் மெக்ராத் அறிவுரை


வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சென்னையில் மெக்ராத் அறிவுரை
x
தினத்தந்தி 18 July 2017 4:52 AM GMT (Updated: 2017-07-18T10:22:28+05:30)

சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மெகராத் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான கிளான் மெக்ராத், சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.

அங்கு  செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:-

தற்போது உள்ள இளைஞர்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. நுண்ணிய பிரச்சனைகளை கூட சரிசெய்து கொண்டு விளையாடுவதற்கான சாதனங்கள் இருக்கின்றன.

ஒரு வேகப்பந்து வீச்சாளர் எல்லா நாட்டிலும் சிறப்பாக செயல்படவேண்டுமென்றால், இந்திய சீதோஷண நிலையில் சிறப்பாக செயல்பட வேண்டும்.

அப்படி அவர்கள் இந்திய சீதோஷண  நிலையில் சிறப்பாக செயல்பட்டால், உலகில் உள்ள எந்த நாட்டிலும் அவர்கள் சிறப்பான முறையில் பந்து வீசுவார் என்று தெரிவித்துள்ளார்.

Next Story