மகளிர் கிரிக்கெட்: இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான ஆட்டம் மழையால் பாதிப்பு, 42 ஓவர்களாக குறைப்பு


மகளிர் கிரிக்கெட்: இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான ஆட்டம் மழையால் பாதிப்பு, 42 ஓவர்களாக குறைப்பு
x
தினத்தந்தி 20 July 2017 12:15 PM GMT (Updated: 2017-07-20T17:57:31+05:30)

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்டின் தொடரில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான இன்றைய அரையிறுதி ஆட்டம் மழையால் தாமதம் ஆகியுள்ளது.

டெர்பி,

8 அணிகள் இடையிலான 11–வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் லீக் ஆட்டங்கள் முடிவில் முறையே முதல் 4 இடங்களை பிடித்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, பாகிஸ்தான் அணிகள் அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின.

முதலாவது அரைஇறுதியில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.இந்த நிலையில் இன்று  நடைபெறும் 2–வது அரைஇறுதிப்போட்டியில் இந்திய அணி, நடப்பு சாம்பியனான வலுவான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. மழை காரணமாக இந்த போட்டி தற்போது தாமதம் ஆனதையடுத்து போட்டி 42 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.  இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்து வருகிறது. Next Story