கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இந்திய துவக்க வீரர் ஷிகர் தவான் சதம் + "||" + Dhawan completes century after Rahul's exit

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இந்திய துவக்க வீரர் ஷிகர் தவான் சதம்

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இந்திய துவக்க வீரர் ஷிகர் தவான் சதம்
இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
பல்லகலே,

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி பல்லகெலேயில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வழக்கம் போல் இன்றைய போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தினர். அபாரமாக ஆடிய தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 188 ரன்களை சேர்த்துள்ளது. 

தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 85 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து புஜரா ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான்  சதம் அடித்து அசத்தினார். சர்வதேச போட்டிகளில் ஷிகர் தவான் அடிக்கும் 6 வது சதம் இதுவாகும். 

இந்திய அணி 43.2 ஓவர்கள் வரை ஒரு விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. ஷிகர் தவான்(109) ரன்கள், புஜரா(2 ரன்கள்) களத்தில் உள்ளனர். முன்னதாக, அரைசதம் அடித்த லோகேஷ் ராகுல், தொடர்ச்சியாக 7- அரைசதங்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.