ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங் தேர்வு


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங் தேர்வு
x
தினத்தந்தி 2 Jan 2019 11:31 PM GMT (Updated: 2 Jan 2019 11:31 PM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. #INDVsAUS

சிட்னி, 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது.  முதல் 3 டெஸ்டுகளில் 2-ல் இந்தியாவும், ஒன்றில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன.

தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி கடைசி டெஸ்டை டிரா செய்தாலே தொடரை வசப்படுத்தி விடலாம். மேலும் 71 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடி வரும் இந்திய அணி புதிய சரித்திரம் படைக்கும் வேட்கையுடன் விராட் கோலி தலைமையில் களமிறங்கி உள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் ஆஸ்திரேலியாவும் களமிறங்கி உள்ளது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் சார்பில் மயங்க் அகர்வால் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் முதலாவதாக களமிறங்கி விளையாடி வருகிறார்கள்.

இரு அணிகளில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியல்:-

இந்தியா: மயங்க் அகர்வால், லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷாப் பான்ட், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா.

ஆஸ்திரேலியா: மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஸ்சானே, டிம் பெய்ன் (கேப்டன்), பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.



Next Story