5வது ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு


5வது ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு
x
தினத்தந்தி 3 Feb 2019 7:42 AM IST (Updated: 3 Feb 2019 7:42 AM IST)
t-max-icont-min-icon

5வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

வெல்லிங்டன்,

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 ஆட்டங்களில் முறையே 8 விக்கெட், 90 ரன், 7 விக்கெட் வித்தியாசங்களில் எளிதில் வெற்றி பெற்ற இந்திய அணி 4-வது ஆட்டத்தில் படுதோல்வி அடைந்தது. ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்ட இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் இன்று நடக்கிறது.  இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்திய அணியில் கலீல், குல்தீப் மற்றும் கார்த்திக் ஆகியோருக்கு பதிலாக ஷமி, தோனி மற்றும் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.  நியூசிலாந்து அணியில் குப்தில்லுக்கு பதிலாக மன்ரோ விளையாட உள்ளார்.
1 More update

Next Story