ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சு தேர்வு


ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சு தேர்வு
x
தினத்தந்தி 1 April 2019 7:48 PM IST (Updated: 1 April 2019 7:48 PM IST)
t-max-icont-min-icon

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

மொகாலி,

மொகாலியில், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான 13-வது லீக் போட்டி தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற  டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து பஞ்சாப் அணி முதலில் களமிறங்கி  பேட்டிங் செய்ய உள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேராக 22 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 13 வெற்றியும். டெல்லி கேப்பிட்டல்ஸ் 9 வெற்றியும் பெற்றுள்ளன.

மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் தலா 2 வெற்றி, ஒரு தோல்வி என்று 4 புள்ளிகள் பெற்றுள்ளன. 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர்கள்:-

அஸ்வின் (கேப்டன்),  லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், டேவிட் மில்லர், முகமது ‌ஷமி

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர வீரர்கள்:-

ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ரிஷாப் பான்ட், ஷிகர் தவான், பிரித்வி ஷா, ரபடா, 

1 More update

Next Story