ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சு தேர்வு


ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சு தேர்வு
x
தினத்தந்தி 4 April 2019 2:16 PM GMT (Updated: 2019-04-04T19:46:56+05:30)

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

டெல்லி,

டெல்லியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான 16-வது லீக் போட்டி தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து டெல்லி அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேராக 12 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் டெல்லி அணி 4 வெற்றிகளையும். ஐதராபாத் அணி 8  வெற்றிகளையும் பெற்று உள்ளன.

மேலும் இத்தொடரில் ஐதராபாத் அணி 3 போட்டிகளில்  2 வெற்றியையும், டெல்லி அணி 4 போட்டிகளில்  2 வெற்றியையும் பெற்று உள்ளன. எனவே இரு அணிகளும் 3-வது வெற்றியை பெற கடும் முனைப்புடன் விளையாடும் என்பதால், இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி அணியின் நட்சத்திர வீரர்கள்:-

ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), பிரித்வி ஷா, ஷிகர் தவான், காலின் இங்ராம், ரிஷாப் பான்ட், ரபடா,  இஷாந்த் ஷர்மா.

ஐதராபாத் அணியின் நட்சத்திர வீரர்கள்:-

புவனேஸ்வர் குமார் (கேப்டன்), டேவிட் வார்னர்,  பேர்ஸ்டோ, விஜய் ஷங்கர்,  யூசுப் பதான், ரஷீத் கான் . 


Next Story