ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: கொல்கத்தா அணிக்கு 140 ரன்கள் இலக்கு


ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: கொல்கத்தா அணிக்கு 140 ரன்கள் இலக்கு
x
தினத்தந்தி 7 April 2019 4:19 PM GMT (Updated: 2019-04-07T22:36:36+05:30)

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு 140 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூர்,

ஜெய்ப்பூரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான 21-வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி  20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை எடுத்துள்ளது. 

ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஸ்டீவன் சுமித் 73 (59) ரன்கள், ஜோஸ் பட்லர் 37 (34) ரன்கள் எடுத்தனர்.

கொல்கத்தா அணியில் ஹாரி கர்னி  2 விக்கெட் மற்றும் பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட் எடுத்தனர்.

இதனையடுத்து கொல்கத்தா அணி 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.

Next Story