ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு


ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு
x
தினத்தந்தி 8 April 2019 2:14 PM GMT (Updated: 2019-04-08T19:44:55+05:30)

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

மொகாலி,

மொகாலியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான 22-வது லீக் போட்டி தொடங்கியது. 

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து ஐதராபாத் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.

இத்தொடரில், 5 போட்டிகளில் விளையாடி உள்ள இவ்விரு அணிகளும் தலா 3 வெற்றி, 2 தோல்வி என்று 6 புள்ளிகள் பெற்றுள்ளன.

பலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் கிறிஸ் கெய்ல் (பஞ்சாப்), வார்னர் (ஐதராபாத்) ஆகியோரின் பேட்டிங் ஜாலத்தை காண ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர்கள்:-

ஆர்.அஸ்வின் (கேப்டன்), கிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல், சர்ப்ராஸ் கான், டேவிட் மில்லர், ஆண்ட்ரூ டை.

ஐதராபாத் அணியின் நட்சத்திர வீரர்கள்:-

புவனேஸ்வர் குமார் (கேப்டன்), டேவிட் வார்னர், ஜே பேர்ஸ்டோ, விஜய் ஷங்கர், யூசுப் பதான், ரஷீத் கான், முகமது நபி.

Next Story