ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு


ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு
x
தினத்தந்தி 11 April 2019 2:13 PM GMT (Updated: 2019-04-11T19:43:08+05:30)

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

ஜெய்ப்பூர்,

ஜெய்ப்பூரில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான 25-வது லீக் போட்டி தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, ஒரு தோல்வி என்று 10 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 ஆட்டங்களில் ஒரு வெற்றி, 4 தோல்வி என்று 2 புள்ளியுடன் பின்தங்கியுள்ளது.

சுழல் ஜாலம் மற்றும் டோனியின் கேப்டன்ஷிப் சென்னை அணிக்கு வலுசேர்க்கிறது. ஏற்கனவே ராஜஸ்தானுக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் சென்னை அணி 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 

இந்த ஆட்டத்திலும் சென்னை அணி வெற்றி பெற்றால் அது டோனியின் கேப்டன்ஷிப்புக்கு கிடைத்த 100-வது வெற்றியாக அமையும். இந்த மைல்கல்லை எட்டும் முதல் வீரர் என்ற பெருமையையும் டோனி பெறுவார்.

சென்னை அணியின் நட்சத்திர வீரர்கள்:-

டோனி (கேப்டன்), ஷேன் வாட்சன், டு பிளிஸ்சிஸ், அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர்,  இம்ரான் தாஹிர்.

ராஜஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்கள்:-

ரஹானே (கேப்டன்), ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ், ஸ்டீவன் சுமித், ஸ்ரேயாஸ் கோபால், ஜெய்தேவ் உனட்கட், தவால் குல்கர்னி.

Next Story