ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: பெங்களூர் அணிக்கு 174 ரன்கள் இலக்கு


ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: பெங்களூர் அணிக்கு 174 ரன்கள் இலக்கு
x
தினத்தந்தி 13 April 2019 4:27 PM GMT (Updated: 2019-04-13T21:57:30+05:30)

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணிக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மொகாலி,

மொகாலியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான 28-வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை எடுத்துள்ளது. 

பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக கிறிஸ் கெய்ல் ஆட்டமிழக்காமல் 99 (64) ரன்கள் எடுத்தார். லோகேஷ் ராகுல் மற்றும் மன்தீப் சிங் 18 ரன்கள் எடுத்தனர்.

பெங்களூர் அணியில் சாஹல் 2 விக்கெட், மொயின் அலி மற்றும் முகமது சிராஜ் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து பெங்களூர் அணி 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.

Next Story