ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு


ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு
x
தினத்தந்தி 14 April 2019 10:30 AM GMT (Updated: 2019-04-14T16:52:56+05:30)

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

கொல்கத்தா, 

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான 29-வது லீக் போட்டி தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து கொல்கத்தா அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.

சென்னை அணி 7 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 1 தோல்வியுடன் 12 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.

கொல்கத்தா அணி 7 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகளை பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

சென்னை அணியின் நட்சத்திர வீரர்கள்;-

டோனி (கேப்டன்), ஷேன் வாட்சன், டு பிளசிஸ், அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, தீபக் சாஹர், இம்ரான் தாஹிர்.

கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர்கள்;-

தினேஷ் கார்த்திக் (கேப்டன்), ரஸ்செல், கிறிஸ் லின், உத்தப்பா, பியுஷ் சாவ்லா, குல்தீப் யாதவ்.

Next Story