உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கான இந்திய அணி அறிவிப்பு -தமிழக வீரர்கள் விஜய்சங்கர், தினேஷ் கார்த்திக் சேர்ப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக வீரர்கள் விஜய்சங்கர், தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
மும்பை
12-வது உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து மற்றும் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணிகளை அறிவிக்க வருகிற 23-ந் தேதி கடைசி நாளாகும். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோரும் கலந்து கொண்டனர்,
கூட்டத்திற்கு பின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையில் தேர்வாளர்கள் வீரர்கள் விவரத்தை அறிவித்தனர்.
வீரர்கள் விவரம் வருமாறு:-
விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், மகேந்திர சிங் டோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்த்திக் பாண்ட்யா, விஜய் சங்கர், குல்தீப் யாதவ், யுஸ்ந்திரா சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக்.
-#TeamIndia for @ICC#CWC19 💪💪#MenInBlue 💙 pic.twitter.com/rsz44vHpge
— BCCI (@BCCI) April 15, 2019
India’s squad for the ICC #CWC19 announced: Virat Kohli (Capt), Rohit Sharma (vc), Shikhar Dhawan, KL Rahul, Vijay Shankar, MSD (wk), Kedar Jadhav, Dinesh Karthik, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Bhuvneshwar Kumar, Jasprit Bumrah, Hardik Pandya, Ravindra Jadeja, Mohd Shami
— BCCI (@BCCI) April 15, 2019
Related Tags :
Next Story






