கொல்கத்தா அணிக்கு 214 ரன்கள் இமாலய இலக்கு - விராட்கோலி அதிரடி சதம்


கொல்கத்தா அணிக்கு 214 ரன்கள் இமாலய இலக்கு - விராட்கோலி அதிரடி சதம்
x
தினத்தந்தி 19 April 2019 4:23 PM GMT (Updated: 19 April 2019 5:24 PM GMT)

பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு 214 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கொல்கத்தா,

கொல்கத்தாவில், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான 35-வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி  20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களை எடுத்துள்ளது.

பெங்களூர் அணியில் அதிரடியாக விளையாடிய விராட்கோலி 100 (58) ரன்கள், மொயின் அலி 66 (28) ரன்கள் விளாசினர்.

கொல்கத்தா அணியில் சுனில் நரின், ஆந்த்ரே ரஸ்செல், குல்தீப் யாதவ், ஹாரி கர்னி ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து கொல்கத்தா அணி 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்க உள்ளது.

Next Story