ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. #IPL2019 #MIvSRH
மும்பை,
ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான 51-வது லீக் போட்டி தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து மும்பை அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி 7 வெற்றி, 5 தோல்வி என்று 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. எஞ்சிய 2 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்று வாய்ப்பை (பிளே-ஆப்) உறுதி செய்து விடலாம்.
ஐதராபாத் அணி 12 ஆட்டங்களில் 6 வெற்றி மற்றும் 6 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. தனது கடைசி இரு லீக்கிலும் வெற்றி பெற்றால் மட்டுமே சிக்கலின்றி அடுத்த சுற்றை எட்ட முடியும்.
ஐதராபாத் அணி ஏற்கனவே மும்பையிடம் வெறும் 96 ரன்னில் சுருண்டு தோற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






