ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சு தேர்வு


ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சு தேர்வு
x
தினத்தந்தி 3 May 2019 7:40 PM IST (Updated: 3 May 2019 7:40 PM IST)
t-max-icont-min-icon

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. #IPL2019 #KKRvKXIP

மொகாலி,

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஆர்.அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான 52-வது லீக் போட்டி தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து பஞ்சாப் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.

கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் தலா 5 வெற்றி, 7 தோல்வி என்று 10 புள்ளியுடன் உள்ளன. இவ்விரு அணிகளும் தங்களது கடைசி இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும். அதனால் இன்றைய ஆட்டத்தில் தோற்கும் அணி ஏறக்குறைய போட்டியை விட்டு வெளியேறி விடும்.

பஞ்சாப் அணியை பொறுத்தவரை எஞ்சிய இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டும் போதாது. ரன்ரேட்டையும் (தற்போது ரன்ரேட் -0.296) வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும். 

ஏற்கனவே இவ்விரு அணிகளும் கொல்கத்தா ஈடன்கார்டனில் சந்தித்த ஆட்டத்தில் கொல்கத்தா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதற்கு வட்டியும் முதலுமாக பஞ்சாப் அணி பதிலடி கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
1 More update

Next Story