ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சு தேர்வு


ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சு தேர்வு
x
தினத்தந்தி 4 May 2019 2:15 PM GMT (Updated: 2019-05-04T19:45:38+05:30)

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. #IPL2019 #SRHvRCB

பெங்களூரு,

விராட்கோலி தலைமையிலான  பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான 54-வது லீக் போட்டி தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு  செய்துள்ளது.  இதனையடுத்து ஐதராபாத் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.

பெங்களூரு, ஐதராபாத் அணிகளுக்கும் நடப்பு தொடரில் இதுவே கடைசி லீக் ஆட்டமாகும். 9 புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ள விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி அடுத்த சுற்று வாய்ப்பை முன்பே இழந்து விட்டது. அதனால் அந்த அணியை பொறுத்தவரை ஆறுதல் வெற்றிக்காக களம் காணும்.

முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு தான் இந்த ஆட்டம் மிகவும் முக்கியமானதாகும். 6 வெற்றி, 7 தோல்வி என்று மொத்தம் 12 புள்ளிகள் பெற்றுள்ள ஐதராபாத் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தான் ‘பிளே–ஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும்.

ஏற்கனவே சந்தித்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவை பந்தாடி இருந்தது. அந்த தோல்விக்கு பழிதீர்த்து உள்ளூரில் உயரிய நிலையுடன் ஆட்டத்தை முடிக்கும் வேட்கையுடன் பெங்களூரு அணியினர் இருப்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Next Story