ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: பஞ்சாப் அணிக்கு 171 ரன்கள் இலக்கு


ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: பஞ்சாப் அணிக்கு 171 ரன்கள் இலக்கு
x
தினத்தந்தி 5 May 2019 12:22 PM GMT (Updated: 2019-05-05T18:50:05+05:30)

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு 171 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #IPL2019 #CSKvKXIP

மொகாலி,

டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும்  ஆர்.அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான 55-வது லீக் போட்டி நடைப்பெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற  அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து  முதலில் களமிறங்கிய சென்னை அணியின் ஷேன் வாட்சன் 7 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.  பின்னர் ஜோடி சேர்ந்த டு பிளிஸ்சிஸ் மற்றும் சுரேஷ் ரெய்னா சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.  

இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டம் அணியின் ரன் வேகத்தை உயர்த்தியது. இவ்விரு வீரர்களும் அடுத்தடுத்து தங்களது அரைசதத்தினை பதிவு செய்தனர்.

இறுதியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை எடுத்துள்ளது.

சென்னை அணியில் அதிகபட்சமாக டு பிளிஸ்சிஸ் 96 (55) ரன்கள் , சுரேஷ் ரெய்னா 53 (38) ரன்கள் எடுத்தனர்.

பஞ்சாப் அணியில், சாம் குர்ரன் 3 விக்கெட்,  முகமது சமி 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து பஞ்சாப் அணி 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.

Next Story