ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சு தேர்வு


ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சு தேர்வு
x
தினத்தந்தி 8 May 2019 1:47 PM GMT (Updated: 2019-05-08T19:17:29+05:30)

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. #IPL2019 #DCvSRH

விசாகப்பட்டினம்,

ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்றுப்போட்டி தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.  இதனையடுத்து ஐதராபாத் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது. 

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி லீக் சுற்றில் 9 வெற்றி, 5 தோல்வியுடன் 18 புள்ளிகளுடன் 3–வது இடத்தை பிடித்து ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது. 

ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி லீக் சுற்றில் 6 வெற்றி, 8 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றது. 4–வது இடத்துக்கான போட்டியில் ஐதராபாத், கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் ஒரே புள்ளியுடன் சமநிலை வகித்த போதிலும் ‘ரன்–ரேட்’ அடிப்படையில் ஐதராபாத் அணி 4–வது இடம் பிடித்து ‘பிளே–ஆப்’ சுற்றுக்குள் நுழைந்தது.

நடப்பு சீசனில் இரு அணிகளும் லீக் ஆட்டத்தில் 2 முறை சந்தித்தன. இதில் முதலாவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியும், 2–வது ஆட்டத்தில் டெல்லி அணியும் வெற்றி பெற்றன. டெல்லி அணியின் அதிரடி ஆட்டத்துக்கு முன்பு ஐதராபாத் அணி தாக்குப்பிடிக்குமா? என்பது சற்று சந்தேகம் தான்.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாது. 10–ந் தேதி நடைபெறும் 2–வது தகுதி சுற்று ஆட்டத்தில், முதல் தகுதி சுற்றில் தோல்வி அடைந்த அணியுடன் மோத வேண்டும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி போட்டியை விட்டு வெளியேறும்.

Next Story