ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டெல்லி அணிக்கு 163 ரன்கள் இலக்கு


ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: டெல்லி அணிக்கு 163 ரன்கள் இலக்கு
x
தினத்தந்தி 8 May 2019 4:01 PM GMT (Updated: 2019-05-08T22:34:58+05:30)

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணிக்கு 163 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #IPL2019 #DCvSRH

விசாகப்பட்டினம்,

ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகளுக்கான இடையேயான வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்றுப்போட்டி நடைப்பெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து  முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை எடுத்துள்ளது.

ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக, மார்ட்டின் கப்தில் 36 (19) ரன்கள், மனிஷ் பாண்டே 30 (36) ரன்கள், வில்லியம்சன் 28 (27) ரன்கள், விஜய் சங்கர் 25 (11) ரன்கள் எடுத்தனர்.

டெல்லி அணியில், கீமோ பால் 3 விக்கெட், இஷாந்த் ஷர்மா 2 விக்கெட், அமித் மிஸ்ரா மற்றும் டிரென்ட் போல்ட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து டெல்லி அணி 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.

Next Story