கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு + "||" + Congress, SP legislators oppose orange jerseys for Indian cricket team

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சிக்கு   காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும்  எதிர்ப்பு
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மட்டும் இந்திய அணி புதிய ஆரஞ்சு நிற ஜெர்சி அணிந்து விளையாட உள்ளது.
புதுடெல்லி,

இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், எல்லா அணிகளும் மாற்று ஜெர்சி அறிவித்து அதை ஒரே நிற ஜெர்சி கொண்ட அணிகளுக்கு எதிரான போட்டியில் அணிந்து பங்கேற்று வருகின்றன. அதில் தொடரை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணிக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வரும் 30-ம் தேதி இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆரஞ்சு நிற ஜெர்சி அணிந்து பங்கேற்பதாக அறிவித்துள்ளது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு நாட்டையே, காவி மயமாக மாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. சமாஜ்வாடி கட்சியும்  எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் பழைய டி-20 தொடருக்கான ஜெர்சியில் இருந்து புதிய டிசைன் தேர்வு செய்து வடிவமைக்கப்பட்டதாக ஐசிசி விளக்கம் அளித்துள்ளது. இதுவரை இந்திய அணிக்கு 24 முறை உடை மாற்றப்பட்டுள்ள நிலையில் அதில் நீல நிறமே அதிகமாக இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. அதிமுகவும், இந்திய அணியும் தோல்வியிலிருந்து மீண்டு வரும்- அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுகவும், இந்திய அணியும் தோல்வியிலிருந்து மீண்டு வரும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
2. கர்நாடக விவகாரம் மக்களவையில் காங்கிரஸ், தி.மு.க. 2–வது நாளாக வெளிநடப்பு
கர்நாடக விவகாரம் தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ், தி.மு.க. உறுப்பினர்கள் 2–வது நாளாக வெளிநடப்பு செய்தனர்.
3. காங்கிரஸ் கட்சிக்கு இளம் தலைவரே வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது
ராகுல் காந்தி ராஜினாமாவைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு இளம் தலைவர் ஒருவரையே தலைவராக நியமிக்க வேண்டும் என கட்சியில் கோரிக்கை வலுத்து வருகிறது.
4. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார் ஜோதிராதித்ய சிந்தியா
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா செய்துள்ளார்.
5. காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சியின் 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: கர்நாடகத்தில் குமாரசாமி ஆட்சிக்கு நெருக்கடி
கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கட்சிகளைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து உள்ளனர். அவர்களில் 11 பேர் நேற்று பெங்களூருவில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்து பேசினார்கள்.