கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியில் பிளவு ; கேப்டன் பொறுப்புகளை பிரித்து கொடுக்க முடிவு? + "||" + BCCI to check on Kohli-Rohit rift, split captaincy an option

இந்திய கிரிக்கெட் அணியில் பிளவு ; கேப்டன் பொறுப்புகளை பிரித்து கொடுக்க முடிவு?

இந்திய கிரிக்கெட் அணியில் பிளவு ; கேப்டன் பொறுப்புகளை பிரித்து கொடுக்க  முடிவு?
இந்திய கிரிக்கெட் அணியில் பிளவு ஏற்பட்டு உள்ளது என்ற வதந்தியை தொடர்ந்து டெஸ்ட் போட்டிக்கு கோலியையும், ஒரு நாள் போட்டிக்கு ரோகித் சர்மாவையும் கேப்டனாக நியமிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை,

இந்திய அணியில் இருக்கும் வீரர்களில் கேப்டன் கோலிக்கு ஆதரவாக சிலர் இருப்பதாகவும், துணைக் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக சில வீரர்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் தோல்விக்குப் பொறுப்பேற்று கோலியை கேப்டன்ஷிப்பில் இருந்து மாற்றிவிட்டு, அதற்கு பதிலாக ரோகித் சர்மாவை கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது என இந்தியில் வெளிவரும் டேனிக் ஜாக்ரன் நாளேடு செய்தி வெளியிட்டு இருந்தது.

இந்திய அணியில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், கேப்டன் கோலியும் சேர்ந்து கொண்டு அணியில்  தன்னிச்சையாக பல முடிவுகளை எடுக்கிறார்கள். கோலி மற்றும் ரவி சாஸ்திரி இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல தவறான முடிவுகளை எடுத்துள்ளனர்.

உலகக் கோப்பையின் அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்திடம்  மோசமாக தோற்றதன் மிகப்பெரிய காரணம் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் கோலி ஆகியோரின் ஒருதலைப்பட்ச சிந்தனைதான். அச்சத்தின் காரணமாக யாரும் அவர்களை எதிர்க்கவில்லை. 

ரவி சாஸ்திரியும், வீராட் கோலியும் தங்களுக்கு தேவைப்பட்ட வீரர்களை மட்டுமே தேர்வு செய்கிறார்கள். மற்றவர்களிடம் கலந்து பேசி எந்த முடிவும் எடுப்பதில்லை, இவர்களின் செயல்பாட்டால்தான் அணியில் நல்லவிதமான சூழல் கெட்டு பிளவு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த உலகக் கோப்பைப் போட்டிக்கு தயாராகும் வகையில் ரோகித் சர்மாவை புதிய கேப்டனாக உருவாக்க வேண்டும் என்றும் வீரர்களிடையே பேசப்படுகிறது என்றும் அந்த நாளேடு தெரிவித்துள்ளது.

சுவாரஸ்யமாக, கடந்த முறை ஹைதராபாத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்டின் போது  உறுப்பினர்கள், மூத்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளரை சந்தித்த ஒரு கூட்டம் நடந்தது. உலகக் கோப்பையை மனதில் வைத்து ஐபிஎல்லில் ஓய்வெடுக்கும் வீரர்களைப் பார்க்கும்போது கோலி மற்றும் ரோகித்தின் சிந்தனை வேறுபாடு தெரிந்தது.

இந்த நிலையில்  இருவரையும்  டெஸ்ட் போட்டிக்கு  மற்றும் 50 ஓவர்,   20 ஓவர் போட்டிக்கு என தனித்தனி கேப்டன் பொறுப்பு இருவருக்கும்  கொடுக்கலாம் என  பிசிசிஐ  ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கோலியை டெஸ்ட் கேப்டனாகவும், ரோகித் சர்மாவை ஒரு நாள் போட்டி கேப்டனாகவும் நியமிக்க வாய்ப்பு இருப்பதாக பிசிசிஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவத்திற்கு பேட்டி அளித்த கிரிக்கேட் வாரிய  குழுவை சேர்ந்த மூத்த நிர்வகி ஒருவர் கூறியதாவது;-

ஒரு போட்டி தொடர்  முடிந்தவுடன் நல்ல அணிகள் தனது அடுத்த  போட்டிக்காக தயாராகிறது.   எனவே, அடுத்த  தொடருக்கு ஒரு கண் வைத்து, கோலி டெஸ்ட் தொடருக்கும் அதே வேளையில், ரோகித் அணியை ஒருநாள் தொடரில் வழிநடத்தும் விதத்தையும்  இந்திய அணியில் காண முடியும்.

50 ஓவர் போட்டிகளில்  கேப்டன் பதவியை ரோகித் கைப்பற்ற இது சரியான தருணம். தற்போதைய கேப்டனுக்கும் நிர்வாகத்துக்கும் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது, அடுத்த உலகக் கோப்பைக்கு முன்னரே திட்டமிட வேண்டிய நேரம் இது, அதற்காக தற்போதுள்ள யோசனைகள் மற்றும் திட்டங்களுக்கு புதிய மாற்றம்  தேவை. சில பகுதிகளுக்கு  வேறு ஒரு பார்வை தேவை என்பதை நாம் அனைவரும் அறிவோம். ரோகித் இந்த வேலைக்கு சரியான மனிதராக இருப்பார். 

மறுஆய்வுக் கூட்டம் நடைபெறும் என்று வினோத் ராய் (கூட்டுறவுத் தலைவர்) ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். மறுஆய்வு நடைபெறும் போது இதைக் கண்டறிய வேண்டும், மேலும் இந்த வதந்திகளின்  காரணத்தை அறிவது முக்கியம் என கூறினார்.