கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி தலைவர் கபில் தேவ் ராஜினாமா!


கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி தலைவர் கபில் தேவ் ராஜினாமா!
x
தினத்தந்தி 2 Oct 2019 8:32 AM GMT (Updated: 2 Oct 2019 8:32 AM GMT)

கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் இந்தியாவின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைப்படி ஒருவர் கிரிக்கெட் அமைப்பில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளில் இருக்கக்கூடாது. சமீபத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரியை நியமனம் செய்த கபில்தேவ், அன்ஷுமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியினர் இரட்டை ஆதாய பதவிகளில் இருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து அது குறித்து பதில் அளிக்கும்படி மூன்று பேருக்கும் கிரிக்கெட் வாரியத்தின் நெறிமுறை அதிகாரி டி.கே.ஜெயின் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த நிலையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சாந்தா ரங்கசாமி, கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி உறுப்பினர், இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் இயக்குனர் பதவி இரண்டையும் நேற்று ராஜினாமா செய்து அதற்குரிய கடிதத்தை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டிக்கு அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில் இந்தியாவின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் மூன்று பேர் கொண்ட தற்காலிக கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் (சிஏசி) தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கிரிக்கெட் ஆலோசனைக் குழு தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் தனது ராஜினாமா கடிதத்தை  அனுப்பியுள்ளார் என  ஐ.ஏ.என்.எஸ் செய்தி  நிறுவனம் தெரிவித்து உள்ளது.

நிர்வாகக் குழுவிலிருந்து (COA) அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருக்க வேண்டும், இது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக மட்டுமே செய்யப்பட்ட நியமனம் என்பதால்  அந்தக் குழு கலைக்கப்படுகிறது. இந்த விஷயத்தில்,  மோதல் கதைகளை தவிர்த்து இருக்கலாம் என்று கிரிக்கெட்  வட்டாரம் மேலும் கூறியுள்ளது.

Next Story