கிரிக்கெட்

கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது? அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா? சர்பிராஸ் அகமது மனைவி கோபம் + "||" + Has MS Dhoni Retired?Sarfaraz Ahmeds Wife Asks Critics Of Former Pakistan Captain

கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது? அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா? சர்பிராஸ் அகமது மனைவி கோபம்

கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது?  அவர்  ஓய்வு பெற்றுவிட்டாரா? சர்பிராஸ் அகமது மனைவி கோபம்
கணவன் குறித்த கேள்விக்கு டோனிக்கு என்ன வயது ஆகிறது? அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா? என சர்பிராஸ் அகமதுவின் மனைவி கோபமாக கேள்வி கேட்டார்.
லாகூர்,

டோனி என்ன கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாரா, அதற்குள் ஏன் என் கணவரைப் பற்றி இந்த கேள்வி கேட்கிறீர்கள் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சர்பிராஸ் அகமது மனைவி குஷ்பாத் சர்பிராஸ் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் டெஸ்ட், 20 ஓவர்  அணியிலிருந்தும் சமீபத்தில் சர்பிராஸ் அகமது நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக பாபர் ஆசம் மற்றும் அசார் அலி ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் மற்றும் டெஸ்ட் தொடருக்கு  கேப்டன்களாக நியமிக்கப்பட்டனர்.

அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் சர்பிராஸ் அகமது இடம் பெறவில்லை, ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டார். 

32 வயதாகும் சர்பிராஸ் அகமது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளார். விரைவில் ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று  செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து சர்பிராஸ் அகமதுவின் மனைவி குஷ்பாத் சர்பிராஸ் அகமதுவிடம் நிருபர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் டோனியோடு ஒப்பிட்டு காட்டமாகப் பதில் அளித்தார். 

என் கணவர் சர்பிராஸ் அகமது ஏன் இப்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டும். அதற்கு என்ன தேவை இருக்கிறது. இப்போது அவருக்கு 32 வயதுதான் ஆகிறது. டோனிக்கு என்ன வயதாகிறது தெரியுமா?. இப்போது டோனிக்கும் ஆகும் வயதில் இன்னும் விளையாடி வருகிறார் தானே, அவரென்ன கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாரா?. என்னுடைய கணவர் இந்த சரிவிலிருந்து மீண்டு வலிமையுடன் திரும்பி வருவார். எனது கணவர் ஒரு போராளி, மீண்டும் திரும்பி வருவார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எனது கணவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதால், அவர் மனவேதனை அடையவில்லை, நம்பிக்கை இழந்து விடவில்லை. பாகிஸ்தான் வாரியம் முடிவெடுத்துள்ளது. அந்த முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம்.

இந்த முடிவை நாங்கள் 3 நாட்களுக்கு முன்பே தெரிந்து கொண்டோம். இத்துடன் எனது கணவருக்கு வாழ்க்கை முடிந்துவிடவில்லை. இனிமேல் எந்தவிதமான சுமையும், அழுத்தமும் இன்றி விளையாடுவார்  எனத் தெரிவித்துள்ளார்.