ஆஸ்திரேலிய காட்டுத் தீ: பூமியை வாழ தகுதியற்ற இடமாக மாற்றி வருகிறோம் - கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வின் டுவிட்


ஆஸ்திரேலிய காட்டுத் தீ: பூமியை வாழ தகுதியற்ற இடமாக மாற்றி வருகிறோம் - கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வின் டுவிட்
x
தினத்தந்தி 7 Jan 2020 2:16 PM GMT (Updated: 2020-01-07T19:46:42+05:30)

ஆஸ்திரேலிய காட்டுத் தீ தொடர்பாக பூமியை வாழ தகுதியற்ற இடமாக மாற்றி வருகிறோம் என இந்திய கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் சிக்கி, விலங்குகள் உயிரிழப்பது மிகுந்த மனவேதனை அளிப்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக  டுவிட்டர் பதிவில் ரவிசந்திரன் அஸ்வின் கூறியிருப்பதாவது:-

பூமியை வாழ தகுதியற்ற இடமாக மாற்றி வருகிறோம், எந்தவித தவறும் இழைக்காத விலங்குகளுக்கும் அதே நிலையை ஏற்படுத்தி விட்டது என்று கூறினார். 

மேலும் கோலா கரடிக்கு தீயணைப்பு வீரர் தண்ணீர் கொடுக்கும் வீடியோவை மேற்கொள் காட்டியுள்ள அஸ்வின், இத்தகைய அவல நிலையை ஏற்படுத்தியதற்கு மனிதர்களே பொறுப்பு என்று தெரிவித்துள்ளார்.

Next Story