இலங்கைக்கு எதிரான 3-வது டி-20 கிரிக்கெட் போட்டி - இந்திய அணி பேட்டிங்


இலங்கைக்கு எதிரான 3-வது டி-20 கிரிக்கெட் போட்டி - இந்திய அணி பேட்டிங்
x
தினத்தந்தி 10 Jan 2020 1:34 PM GMT (Updated: 2020-01-10T19:04:21+05:30)

இலங்கைக்கு எதிரான 3-வது டி-20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

புனே,

இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. கவுகாத்தியில் நடக்க இருந்த முதலாவது ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இந்தூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மராட்டிய மாநிலம் புனேவில் நடைபெறுகிறது. இதில்  டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் மலிங்கா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது.


Next Story