சவுரவ் கங்குலியின் மூத்த சகோதரர் உள்பட குடும்ப உறுப்பினர்கள் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு


சவுரவ் கங்குலியின் மூத்த சகோதரர் உள்பட குடும்ப உறுப்பினர்கள் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 20 Jun 2020 9:31 AM GMT (Updated: 2020-06-20T15:07:04+05:30)

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சவுரவ் கங்குலியின் மூத்த சகோதரர் உள்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் சவுரவ் கங்குலி.  இவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவராக பதவி வகித்து வருகிறார்.  இவரது மூத்த சகோதரன் சினேகாஷிஷ் கங்குலி.

இவர், வங்காள கிரிக்கெட் கூட்டமைப்பின் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.  நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு பரவி வரும் நிலையில், சவுரவ் கங்குலியின் மூத்த சகோதரனான சினேகாஷிஷ் கங்குலிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.  இதே போன்று சினேகாஷிஷ் கங்குலியின் மனைவிக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனை மேற்கு வங்காள சுகாதார துறை இன்று தெரிவித்து உள்ளது.  கடந்த வாரம் நடந்த பரிசோதனையில் சினேகாஷிஷ் கங்குலியின் மாமனார் மற்றும் மாமியாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி இருந்தது.  சவுரவ் கங்குலியின் குடும்ப உறுப்பினர்களில் 4 பேருக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு பரவி இருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Next Story