ஐ.பி.எல். போட்டியை நடத்த ஆர்வமா? நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் மறுப்பு


ஐ.பி.எல். போட்டியை நடத்த ஆர்வமா? நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் மறுப்பு
x
தினத்தந்தி 10 July 2020 12:38 AM IST (Updated: 10 July 2020 12:38 AM IST)
t-max-icont-min-icon

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்து இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறியிருந்தார்.

வெலிங்டன்,

கொரோனா அச்சத்தால் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டு உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்து இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறியிருந்தார். ஆனால் இதனை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் செய்தி தொடர்பாளர் ரிச்சர்ட் பூக் அளித்த பேட்டியில், ‘ஐ.பி.எல். போட்டியை நடத்த நியூசிலாந்து ஆர்வமுடன் இருப்பதாக வெளியான தகவல் யூகத்தின் அடிப்படையிலானது. ஐ.பி.எல். கிரிக்கெட்டை நடத்த நாங்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை. இதற்காக இந்திய கிரிக்கெட் வாரியத்தையும் அணுகவில்லை’ என்றார்.

Next Story