ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு


ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு
x
தினத்தந்தி 1 Oct 2020 2:00 PM GMT (Updated: 2020-10-01T19:30:17+05:30)

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

துபாய்,

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

ஐபிஎல் தொடரின் 13-வது லீக் ஆட்டம் அபு தாபியில் இன்று இரவு 7.30 தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் ஆட்டத்தில் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதனை தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்க ஆட்டகாரர்கள் ரோகித் சர்மா மற்றும் குயின்டான் டி காக் களம் இறங்கி விளையாடி வருகின்றனர்.

மும்பை இந்தியன்ஸ் அணி விவரம்:-

1. ரோகித் சர்மா, 2. குயின்டான் டி காக், 3, சூர்யகுமார் யாதவ், 4. இஷான் கிஷன், 5. ஹர்திக் பாண்ட்யா, 6. கீரன் பொல்லார்டு, 7. குருணால் பாண்ட்யா, 8. ஜேம்ஸ் பேட்டின்சன், 9. ராகுல் சாஹல், 10. போல்ட், 11. பும்ரா.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விவரம்:-

1. கேஎல் ராகுல், 2. மயங்க் அகர்வால், 3. நிக்கோலஸ் பூரன், 4. மேக்ஸ்வெல், 5. கருண் நாயர், 6. ஜேம்ஸ் நீசம், 7. சர்பராஸ் கான், 8. கிருஷ்ணப்பா கவுதம், 9. முகமது ஷமி, 10. ஷெல்டன் காட்ரெல், 11. ரவி பிஷ்னோய்.


Next Story