ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்கு


ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்கு
x
தினத்தந்தி 3 Oct 2020 11:58 AM GMT (Updated: 2020-10-03T17:28:13+05:30)

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அபுதாபி, 

அபுதாபியில் ஐபிஎல் கிரிக்கெட்டின் 15-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், ஸ்டீவன் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன. 

இதனைத்தொடர்ந்து டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பில் ஜோஸ் பட்லர் மற்றும் கேப்டன் ஸ்டிவன் சுமித் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.

அந்த ஜோடியில் சுமித் 5(5) ரன்களும், ஜோஸ் பட்லர் 22(12) ரன்களும், அவர்களைத்தொடந்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 4(3) ரன்னும், ராபின் உத்தப்பா 17(22) ரன்களும், ரியான் பராக் 16(18) ரன்களும், மகிபால் லோம்ரோர் 47(39) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். முடிவில் ராகுல் தேவாட்டியா 24(12) ரன்களும், ஜோப்ரா ஆர்ச்சர் 16(10) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மகிபால் லோம்ரோர் 47 ரன்கள் எடுத்தார். அதிகபட்சமாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் சார்பில் சாஹல் 3 விக்கெட்டுகளும், உதானா 2 விக்கெட்டுகளும், சைனி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Next Story