கிரிக்கெட்

ஐபிஎல் 2020: பிளே ஆஃப் சுற்று, இறுதிப் போட்டி நடைபெறும் இடம், தேதி அறிவிப்பு + "||" + IPL 2020 Playoffs And Final Schedule Announced: Dates, Venues And Timings, All You Need to Kno

ஐபிஎல் 2020: பிளே ஆஃப் சுற்று, இறுதிப் போட்டி நடைபெறும் இடம், தேதி அறிவிப்பு

ஐபிஎல் 2020: பிளே ஆஃப் சுற்று, இறுதிப் போட்டி  நடைபெறும் இடம், தேதி அறிவிப்பு
ஐபிஎல் தொடரில் ஏறக்குறைய லீக் ஆட்டங்கள் முடியும் நிலையில் இருக்கின்றன.
அபுதாபி,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.  அபுதாபி, துபாய்,ஷார்ஜா ஆகிய 3 நகரங்களில் நடந்து வருகிறது. ஐபிஎல் தொடரில் ஏறக்குறைய லீக் ஆட்டங்கள் முடியும் நிலையில் இருக்கின்றன.  

ஐபிஎல் தொடர் தொடங்கியபோது, லீக் சுற்றுகளின் தேதிகள், இடங்களை மட்டுமே அறிவித்திருந்த ஐபிஎல் நிர்வாகம், பிளே ஆஃப் சுற்றுக்கான தேதி, இடங்களை அறிவிக்கவில்லை. இந்நிலையில் பிசிசிஐ நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடக்கும் இடங்கள்,தேதிகளை அறிவித்துள்ளது.

பிளே ஆஃப் சுற்றில் முதல் தகுதிச் சுற்று ஆட்டம் நவம்பர் 5-ம் தேதி துபாயில் நடைபெறுகிறது. இதில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இரு இடங்களைப் பெற்ற அணிகள் மோதும். எலிமினேட்டர் ஆட்டம் நவம்பர் 6-ம் தேதி அபுதாபியில் நடக்கிறது. இதில் 3-வதுமற்றும் 4-வது இடம் பெற்ற அணிகள் மோதுகின்றன.

நவம்பர் 8-ம் தேதி அபுதாபியில் நடக்கும் 2-வது தகுதிச்சுற்றுஆட்டத்தில் முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் தோற்ற அணியும், எலிமினேட்டர் சுற்றில் வென்ற அணியும் மோதுகின்றன.

நவம்பர் 10ம் தேதி துபாயில் இறுதிப்போட்டி நடக்கிறது. இதில் முதல் தகுதிச்சுற்றில் வென்ற அணியும், 2-வது தகுதிச்சுற்றில் வென்ற அணியும் மோதுகின்றன. போட்டிகள் அனைத்தும இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவில் பயிற்சியை தொடங்கிய கிரிக்கெட் வீரர் நடராஜன்
பயிற்சியின் போது டி நடராஜன் முதன்முறையாக இந்திய அணி வீரர்களுக்கு பந்து வீசினார். அவர் பந்து வீசும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
2. 13-வது ஐபிஎல் சீசனில் விருது வென்ற வீரர்கள் விவரம்...!
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த கே.எல் ராகுலுக்கு ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்பட்டுள்ளது.
3. ஐபிஎல்: பிளே ஆப் சுற்றை ஐதராபாத் எட்டுமா? வெற்றி இலக்காக 150 ரன்கள் நிர்ணயம்
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 149 ரன்கள் சேர்த்துள்ளது.
4. ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை முதலில் பேட்டிங்
ஐதராபாத் அணிக்கு இந்த ஆட்டத்தின் முடிவு முக்கியமானது. இதில் ஜெயித்தால் ரன்ரேட்டிலும் வலுவாக இருப்பதால் சிக்கலின்றி பிளே-ஆப் சுற்றை ஐதராபாத் அணி எட்டிவிடும்
5. ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடினால் டோனியால் சிறப்பாக விளையாட முடியாது - கபில் தேவ்
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருப்பதாக டோனி கூறியுள்ளார்.