ஊழியருக்கு கொரோனா: 5வது டெஸ்ட் போட்டிக்கான பயிற்சி ரத்து


ஊழியருக்கு கொரோனா: 5வது டெஸ்ட் போட்டிக்கான பயிற்சி ரத்து
x
தினத்தந்தி 9 Sep 2021 10:45 AM GMT (Updated: 2021-09-09T16:15:40+05:30)

ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டிக்கான பயிற்சி ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் வரும் 10-ம் தேதி தொடங்க உள்ளது.

ஓவலில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டியில் 157 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்திய பின் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது. மான்செஸ்டரில் நடக்கும் கடைசி டெஸ்டையும் வென்று 3-1 என்ற கணக்கில் வெல்ல விராட் கோலி படை காத்திருக்கிறது.

இந்தநிலையில்  இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டிக்கான பயிற்சி ரத்து செய்யப்படுவதாகவும்  ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பிசிசிஐ அறிவித்துள்ளது. 

Next Story