நியூசிலாந்து தொடர்; பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் முகமது நவாசுக்கு கொரோனா பாதிப்பு உறுதி


நியூசிலாந்து தொடர்; பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் முகமது நவாசுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 9 Sep 2021 7:21 PM GMT (Updated: 2021-09-10T00:51:35+05:30)

நியூசிலாந்து தொடரில் பங்கேற்கவுள்ள பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் முகமது நவாசுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ராவல்பிண்டி,


நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டி தொடர் மற்றும் 5 இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது.  வருகிற 17ந்தேதி தொடங்கி அக்டோபர் 3ந்தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்நிலையில், பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் முகமது நவாசுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.  இதனை தொடர்ந்து வாரியத்தின் 
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி அவர், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்றும் அறிக்கை தெரிவிக்கின்றது.


Next Story