கிரிக்கெட்

டோனியை பார்த்து உற்சாகம் அடைந்த பாகிஸ்தான் பந்து வீச்சாளர்! வைரலாகும் வீடியோ + "||" + IND vs PAK, T20 World Cup 2021: Dhoni reaches Pakistan’s practice area! Desperate to meet this player VIDEO

டோனியை பார்த்து உற்சாகம் அடைந்த பாகிஸ்தான் பந்து வீச்சாளர்! வைரலாகும் வீடியோ

டோனியை பார்த்து உற்சாகம் அடைந்த பாகிஸ்தான் பந்து வீச்சாளர்!  வைரலாகும் வீடியோ
பாகிஸ்தானைச் சேர்ந்த பந்துவீச்சாளர் ஷானவாஸ் தஹானி, டோனியைப் பார்த்ததும் உற்சாகம் அடைந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
துபாய்,

ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் கடந்த 17 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 20 ஓவர்  உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா உட்பட தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடுகின்றன.


 இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் தனது முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை வரும் 24-ம் தேதி சந்திக்கிறது.  தற்போது இரு அணி வீரர்களும் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் பாகிஸ்தானின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷானவாஸ் தஹானி, எம்.எஸ். டோனியைப் பார்த்தவுடன் அவரை உற்சாகமாக அழைத்து, 'உங்கள் உடல் வலிமையாக உள்ளது' என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து கேப்டன் டோனி, 'இல்லை எனக்கு வயதாகிவிட்டது என நகைச்சுவையாக  கூறினார். 'இல்லை, நீங்கள் முன்பைவிட வலிமையாக இருக்கிறீர்கள்' என்று கூறினார். பின்னர் சிரித்துக்கொண்டே செல்கிறார்.  இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.