2019 உலகக்கோப்பை இந்திய அணியில் மூன்று கீப்பர்கள் - ரவிசாஸ்திரி தற்போது கூறுவது என்ன?


2019 உலகக்கோப்பை இந்திய அணியில் மூன்று கீப்பர்கள் - ரவிசாஸ்திரி தற்போது கூறுவது என்ன?
x
தினத்தந்தி 10 Dec 2021 2:32 PM GMT (Updated: 2021-12-10T20:02:02+05:30)

2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் 3 கீப்பர்கள் தேர்வு செய்யப்பட்ட சம்பவம் குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

2019 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்த இந்தியா தொடரில் இருந்து வெளியேறியது. 

இந்நிலையில், 2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் 3 கீப்பர்கள் தேர்வு செய்யப்பட்ட சம்பவம் குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தற்போது கருத்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு ரவிசாஸ்திரி அளித்த பேட்டியில், அணி தேர்வு குறித்து நான் பேசுவதற்கு எதுவும் இல்லை. ஆனால், உலகக்கோப்பை தொடருக்கு மூன்று விக்கெட் கீப்பர்கள் தேர்வு செய்யப்பட்டதில் எனக்கு உடன்பாடு இல்லை. அணியில் அம்பதி ராயுடு அல்லது ஸ்ரேயாஸ் அய்யர் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். தோனி, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகிய 3 கீப்பர்களை அணியில் சேர்த்திருப்பதில் என்ன லாஜிக் உள்ளது?’ என்றார். 

Next Story