ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்தை சுருட்டிய ஆஸ்திரேலியா: 20 ரன்கள் அடித்தால் வெற்றி


ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்தை சுருட்டிய ஆஸ்திரேலியா: 20 ரன்கள் அடித்தால் வெற்றி
x
தினத்தந்தி 11 Dec 2021 2:22 AM GMT (Updated: 2021-12-11T07:52:10+05:30)

ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற 20 ரன்களை இங்கிலாந்து நிர்ணயித்துள்ளது.

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ வென்று  முதலில் பேட் செய்த இங்கிலாந்து 50.1 ஓவர்களில் 147 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதன் பிறகு மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் அத்துடன் முடிவுக்கு வந்தது.

பின்னர் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸ்சில் 104.3 ஓவர்களில் 425 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் மார்க் உட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் பிறகு இரண்டாவது இன்னிங்க்சை ஆட தொடங்கியஇங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஹமீத் 27 ரன்களிலும் ரோரி பர்ன்ஸ் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் பிறகு ஜோடி சேர்ந்த டேவிட் மலன் மற்றும் ஜோ ரூட் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். டேவிட் மலன் 82 ரன்களும், கேப்டன் ரூட் 89 ரன்களும் எடுத்து அணிக்கு நம்பிக்கை அளித்த நிலையில், மற்ற பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 103 ஓவர்களில் 297 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அப்போது இங்கிலாந்து அணி 19 ரன்கள் முன்னிலையில் இருந்தது. ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து 20 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளது.

Next Story