விராட் கோலியிடம் என்ன பேசினீர்கள் ? பாபர் அசாமிடம் கேள்வியெழுப்பிய நிருபர்...!


விராட் கோலியிடம் என்ன பேசினீர்கள் ? பாபர் அசாமிடம் கேள்வியெழுப்பிய நிருபர்...!
x
தினத்தந்தி 13 Dec 2021 3:14 PM GMT (Updated: 2021-12-13T20:44:14+05:30)

20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் போது விராட் கோலியிடம் என்ன பேசினீர்கள் என பாபர் அசாமிடம் நிருபர் கேள்வி எழுப்பினார்.

கராச்சி ,

மேற்கிந்திய தீவுகள் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 20 ஓவர்  கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கராச்சியில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக கேப்டன் பாபர் அசாம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர் ஒருவர்  பாபர் அசாமிடம் " 20 உலகக் கோப்பையின் போது நீங்களும் விராட் கோலியும் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது.நீங்கள் என்ன பேசினீர்கள்? எதை பற்றி பேசினீர்கள் ? நீங்கள் அவரிடம் என்ன சொன்னீர்கள் அதற்கு அவர் என்ன சொன்னார் ? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.

அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேலாளர் குறுக்கிட்டு, "உங்களை இடைநிறுத்துவதில்  வருந்துகிறேன். உண்மையில் இது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் செய்தியாளர் சந்திப்பு. மேற்கிந்தியத் தீவுகள் தொடர் தொடர்பாக ஏதேனும் கேள்விகள் இருந்தால் மட்டும் தொடருங்கள்" என அந்த நிருபரிடம் பதில் அளித்தார்.

Next Story