ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு


ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு
x
தினத்தந்தி 16 Dec 2021 4:32 AM GMT (Updated: 2021-12-16T10:02:58+05:30)

ஆஷஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

அடிலெய்டு,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்நிலையில், ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

இரு அணி வீரர்கள் விவரம்;-

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், மார்கஸ் ஹரிஸ், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ட்ராவஸ் ஹெட், கெமரூன் கிரீன், அலெக்ஸ் ஹெரி, மிச்சில் நிசிர், மிச்சல் ஸ்டாக், ரிட்ச்சர்ட் சன், நாதன் லயன்.

இங்கிலாந்து: ராய் பர்ன்ஸ், ஹசப் ஹமீத், டேவிட் மாலன், ஜோ ரூட் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஒலி பாப், ஜோஸ் பட்லர், கிரிஸ் ஓக்ஸ், ஒலி ராபின்சன், ஸ்டுவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

Next Story